திங்கள், 5 நவம்பர், 2018

உள் காய்ச்சல்

















ஊடுருவும் அவள் பார்வை
ஓயவெடுக்க சென்றது!
அவள் தலை நிமிர்ந்த மறுகனமே
என் இதயமே நின்றது !

பார்வையால் கேட்டாள்
வீரனா நீ ?
ஓங்கி சொல்ல நினைத்தேன்
உன் முகம் பார்க்கும்
முன்பு வரை!

அவள் கரம் பற்ற
சுவாசம் உள்ளேயே நின்றது!
சண்டை போட
தெம்பில்லை என்றது!

உடல் நடுங்க!
வியர்வைத்துளி
மிக குளிரோ? 
என்றது

'உள்ளே வந்து பார்!'

ஆவியான செங்குருதி
ஓலமிட்டு சொன்னது.

புதன், 31 அக்டோபர், 2018

போர் ஆமா Pour













கார்மேகம் சூளுதடி
நீலவானம் மாறுதடி
மழைச்சாரல் வீசுதடி
மௌனமொழி பேசுதடி

சூடான தேநீரும்
சுகமாய் மெல்லிசையும்
ஜன்னல் வழி பார்வையிலே
நீர்தெளித்து விளையாடும்

ஓயாத தென்றலுடன்
மாறாத மண்வாசம் 
எறும்புகளும் உணவோடு
மேல்நோக்கி வனவாசம்

இமைமூடா கண்ணுறக்கம்
அவள் நினைவுகளின் பதிவிறக்கம்
ஆயுதமின்றி நானிருக்க
கருனையின்றி போர் தொடுக்கும்.


96














நம்மோடு நடந்த தென்றல்
உன் ஓர பார்வை கண்டு
என் காதோரம் சொன்னதுண்டு
உன் "அவள்" பார்க்கிறாள் என்று!

மனதோடு தாங்காத பாரம்
நீங்காது இருந்த நேரம்
ஆறான கண்கள் அன்று
உன் நிழற்படம் தேடுதின்று.

பிறர் காணாத காட்சியா!
அதற்க்கு நான் மட்டும் சாட்சியா!
கனவுக்குள்ளும் ஒளிந்து விளையாடும்
நீ இராவனனின் பேத்தியா?

காட்சி பிழையாக
உனை காணாமல் இருந்திருக்கலாம்
'ஒரு தடவை உன் மனதில் இருந்தாலே போதுமென்று'
வேண்டாமல் இருந்திருக்கலாம்.

உள் ஓரம் ஊறுகின்ற
ஓங்காரம் பாடுகின்ற
என் நெஞ்சோர நினைவுகளுக்கு
ஓயாமல் சொல்வதுண்டு
"நீ என் நினைவில் இல்லை" என்று.